குண்ணவாக்கத்தில் மனுநீதி நாள் முகாம் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
உத்தரமேரூர் மார்ச்-6
உத்தரமேரூர்
தாலுக்கா, குண்ணவாக்கம் கிராமத்தில் புதன்கிழமையன்று நடைபெற்ற மனுநீதிநாள்
முகாமில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
உத்தரமேரூர் வட்டாட்சியர் கே.தேவராஜன் அனைவரையும் வரவேற்றார். ஒன்றிய
குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர் முன்னிலை
வகித்தனர். உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக மாவட்ட கழக
செயலாளருமான வாலாஜாபாத் பா.கணேசன், வருவாய் கோட்ட அலுவலர் க.சக்திமணி
ஆகியோர் வீட்டுமனை பட்டா ரூ.1லட்சத்து 26 ஆயிரத்து நூறு, உழவர் பாதுகாப்பு
திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை ரூ.10 லட்சத்து 44 ஆயிரம், இயற்கை
மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.95 ஆயிரம், திருமண உதவித்தொகை
ரூ.56 ஆயிரம், வீட்டுமனை ஒப்படை பெறும் பயனாளிகளுக்கு 1 லட்சத்து 26
ஆயிரத்து நூறு ரூபாய் வழங்கி வாழ்த்தி பேசினார்கள். தொகுதி செயலாளர்
கே.ஆர்.தருமன், கிழக்கு மேற்கு ஒன்றிய கழக செயலாளர்கள் கே.பிரகாஷ்பாபு,
வி.ஆர்.அண்ணாமலை, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணைத்தலைவர் குண்ணவாக்கம்
ஆர்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுமதிகுணசீலன்,
ஒழையூர் ஆர்.நாராயணசாமி உட்பட பலர் பங்கேற்றனர். தனிவட்டாட்சியர் (சபாதி)
கே.கிரிஜா நன்றி கூறினார்.

No comments