உத்தரமேரூர் ஒன்றிய தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினர் செவ்வாய்கிழமையன்று உத்தரமேரூர்பேரூந்து
நிலையத்தில் காலை 10.45 மணிமுதல் 11.30 மணி வரை சாலை மறியல் செய்தனர்.
சட்டப்பேரவையில் தே.மு.தி.க அதிருப்தி எம்.எல்.ஏக்களை தாக்கிய விவகாரத்தில்
அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் வி.சி.சந்திரகுமார் பாத்தசாரதி முருகேசன்,
கு.நல்லதம்பி, எஸ் செந்தில்குமார் ஆர்,அருள் செல்வன், ஆகிய ஆறுபேர்
ஓராண்டிற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதை கண்டித்தும், சஸ்பெண்ட்
செய்யப்பட்டுள்ளனர் தே.முதி.க எம்.எல்.ஏக்கள்6 பேர்
சஸ்பெண்ட் செய்ததை வாபஸ் பெறக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர் பேரூந்து
நிலையத்தில் செவ்வாய்கிழமையன்று ஒன்றிய தே.மு.தி.க. செயலாளர் அழிசூர்
வி,கன்னியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் வி.பி.ஜான் மாவட்ட
இளைஞரணி கே.பி.அருண்குமார் முன்னிலை வகித்தனர். பேரூர் கழக செயலாளர்
ஜி.கே.வெங்கடேசன் கழகத்தினரை வரவேற்றனர். ஒன்றிய அவைத்தலைவர் இ.வீரமணி
மாவட்ட மகளிரணி துணைச்செயலாளர் கஜவள்ளி சிறப்பு அழைப்பாளராக கழக மாவட்ட
செயலாளர் ஓவியர் ஆர்.ரமேஷ்பிரபாகரன் கலந்து கொண்டு ஆர்பாட்டத்தை துவக்கி
சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6 எம்.எல்.ஏக்கள் விடுவிக்க கோரி கோஷமிட்டனர்.
மாவட்ட கேப்டன் மன்ற துணைச்செயலாளர் எம்.சந்திரசேகரன் உட்பட 200க்கும்
மேற்பட்டோரை உத்தரிமேரூர் காவல் துறை ஆங்யவாளர் ராஜேந்திர பிரசாத் தடுத்து
நிறுத்தி கைது செய்து சக்தி திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
உத்தரமேரூரில் தே.மு.தி.க.சாலை மறியல்
Reviewed by Uhiramerur News.Com Admin
on
March 28, 2013
Rating: 5
No comments