Disqus Shortname

உத்தரமேரூரை மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இணைக்க கோரிக்கை

உத்தரமேரூர் மார்ச்-24
மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை (படாளம்) ஆரம்பிக்கும்போது ஆலைக்கு
பேருதவியாக பெரும் கரும்பு உற்பத்தி செய்து ஆலைக்கு கொடுத்தது
உத்தரமேரூர் வட்டமாகும்.  இந்த பகுதியை பழிவாங்கும் நோக்குடன்
எஸ்.பி.சர்க்கரை ஆலையில் சேர்த்தனர்.  அதிலிருந்து விவசாயிகள் எதிர்த்து
வருவதோடு கரும்பு பயிர் செய்வதை வெகுவாக குறைத்துக்கொண்டனர்.  மீண்டும்
மதுராந்தகத்தில் சேர்க்க வேண்டும் என்று பல கோரிக்கைகள் வைத்து போராடி
வருகின்றனர்.  இது சம்மந்தமாக தி.மு.க.மாவட்ட விவசாய அணி சார்பில்
முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் 28.12.2012 அன்று மிகப்பெரிய
அளவில் விவசாயிகளை அழைத்து போராட்டம் நடத்தினர்.  இந்நிலையில் 22.03.2013
அன்று காஞ்சிபுரம் அண்ணா அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆலோசனை
நடத்தியுள்ளனர். இதில் தனியார் ஆலை அதிகாரிகள் விவசாயிகளிடம் பல தவறான
தகவல்களை சொல்லி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.  இந்த கூட்டத்திற்கு
எங்களை அழைக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது. எனவே, இந்த கருத்து கேட்பு
கூட்டத்தில் பல தவறுகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.  எனவே, மீண்டும்
மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையிலேயே உத்தரமேரூரை இணைக்க வேண்டும்
என்பதுதான் பெரும்பான்மை விவசாயிகளின் எண்ணமாகும்.  இதுதான்
தி.மு.க.விவசாய அணியின் நிலைபாடும் என்பதை தெரிவித்துக்கொள்வதோடு
பிரச்சனைத் தீர மாவட்ட ஆட்சித்தலைவரே நேரில் விசாரித்து உண்மை கண்டறிந்து
மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சேர்க்க வேண்டுமாய் விவசாயிகளின்
சார்பில் கேட்டுக்கொள்வதாக தி.மு.க.விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் சோழனூர்
மா.ஏழுமலை காஞ்சி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு.

No comments