தேசிய ஊரக வாழ்வாதார செயல்பாடுகள்
உத்தரமேரூர் மார்ச்-22
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் புதுவாழ்வு திட்ட பணிகளை
தேசிய ஊரக வாழ்வாதார இயக்க உயர்நிலை குழுவினர் அண்மையில் பார்வையிட்டனர். இக்குழுவினர் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், பழமத்தூர் கிராமம் மற்றும் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள படப்பை கிராமம் ஆகியவற்றின் கிராம வறுமை சங்கங்களின் செயல்பாடுகளை பார்வையிட்டனர். புதுவாழ்வு திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் சமுதாய அடிப்படையிலான அமைப்புகளின் செயல்பாடுகளை திட்ட இயக்குநர் மைதிலி ராஜேந்திரன் விளக்கி கூறினார். புதுவாழ்வு திட்டத்தின் மூலம் தேர்வு செய்து பயிற்சி அளித்து பணியில் அமர்த்தியுள்ள கூடுவாஞ்சேரியில் உள்ள இன்டிமேட் பேஷன் மற்றும் மல்ரோசாபுரத்தில் உள்ள ட்ரையம்ப் ஆகிய பிரபலமான ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களை பார்வையிட்டனர். புதுவாழ்வு திட்ட கூடுதல் இயக்குநர் ஷஜீவனா, மாநில வல்லுநர்கள் ஆகியோர் இக்குழுவினர் உடன் கலந்து கொண்டனர். மாவட்ட புதுவாழ்வு திட்ட மேலாளர் எஸ்.கழுகாசல மூர்த்தி மேற்படி குழுவினரின் பார்வைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

No comments