உத்தரமேரூர் ஆக,23 உத்தரமேரூர் மீனாட்சி அம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரி சமுதாய மேம்பாட்டு
திட்டம், நாட்டு நலப்பணி திட்டம், மற்றும், மாமண்டூர் ரோட்டரி கிளப்
இணைந்து பாலிடெக்னிக் வளாகத்தில் இரத்தான முகாம் வெள்ளிக்கிழமையன்றுநடைபெற்றது. இம்முகாமில்
ஒருங்கிணைப்பாளர் வி.ராஜேந்திரன் வரவேற்றார். நிர்வாக அலுவலர் பலராமன்
முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் ராஜா தலைமை தாங்கினார். டாக்டர்
எஸ்.குமார், டாக்டர்.கே.டி.குணசேகரன், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு
இரத்தானமுகாமை துவக்கி வைத்தனர். மாமண்டூர் ரோட்டரி கிளப் தலைவர்
மோகனரங்கம் செயலாளர் சுரேஷ் ரோட்டரி சமுதாய சுகாதார சேவைஏழுமலை
ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். ரோட்டரி கிளப் முன்னால்
செயலர் இளங்கோவன், ரவி, பாண்டியராஜன், பார்த்தசாரதி, ஆகியோர் முகாமில்
கலந்து கொண்டனர். கல்லுாரி மாணவர்கள் 145 பேர் இரத்ததான செய்தனர். முடிவில்
என்.எஸ்.எஸ்.திட்ட அலுவலர் மோகன் நன்றி கூறினார்.
இரத்தான முகாம்
Reviewed by UTR GUYS
on
August 24, 2013
Rating: 5
No comments