உத்தரமேரூர்அருகேகடம்பூர்கிராமம்உள்ளது. இப்பகுதி மக்களுக்குகடம்பூர்ஏரியில் தரைகிணறுஅமைத்துமோட்டார்மூலம்மேல்நிலைநீர்தேக்கதொட்டிக்குதண்ணீர்நிரப்பபட்டு வீடுகுழாய்களுக்கு குடிநீர்விநியோகிக்கப்படுவது வழக்கம். இதே பகுதியை சேர்ந்த பெருமாள் 48 இங்குபம்ப்ஆபரேட்டராகபணியாற்றி வந்தார். கடந்த மூன்று வராங்களாக
தொடர் மின் வெட்டு ஏற்பட்டு வந்தது மேலும் இந்த நீர்முழ்கி மோட்டார் அவ்வப்போது
பழுதாவது வழக்கம், இதனால் ஞாயிற்றுகிழமையன்று வேறு மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுப்பதற்காக
பெருமாளும்இதேகிராமத்தைசேர்ந்தபாபு(24) என்பவரையும் உதவிக்கு அழைத்து சென்றிருந்தார். கிணறு மேல் உள்ள தளம் மீது ஏரினார்கள்,அப்போது எதிர்பாராதவிதமாககிணற்றின் மேல்தளம் இடிந்துகிணற்றுக்குள்விழுந்தது. இதில்பெருமாள், பாபுஆகியோர் இடிபாடுகளில்சிக்கி கிணற்றுக்குள் விழுந்தனர்.இதில் இவர்கள் பலத்தகாயம்அடைந்தனர். இரவுநேரம்என்பதால்யாருக்கும்தகவல் தெரியவில்லை. இருவரும்நீரில்மூழ்கிபரிதாபமாகஇறந்தனர். இந்நிலையில்திங்கள் கிழமையன்று காலையில்பெருமாளையும், பாபுவையும்காணவில்லையேஎனஅவரதுஉறவினர்கள்தேடினர். அப்போதுகிணற்றுபகுதிக்குசென்றுபார்த்தபோது இருவரும் கிணற்றுக்குள் இடிபாடுகளில்சிக்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.தகவல்அறிந்துஉத்தரமேரூர்தீயணைப்புபடைவீரர்கள்மற்றும் போலீசாரும் சம்பவ
இடத்திற்கு விரைந்தனர். சுமார் நான்கு நேரம்
போராட்திற்கு பிறகு இருவரின் சடலங்களை கைப்பற்றினர், இதை கண்ட உறவினர்கள்
இறந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி பொதுமக்களும் சாலை மறியிலில் ஈடுபட்டனர்
ஆதிகாரிகளின் பேச்சு வார்த்தைக்கு பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது, பிறகு பரிசோதனைக்காக சடலங்களைசெங்கல்பட்டுஅரசுமருத்துவமனைக்குஅனுப்பினர். இது குறித்து உத்தரமேரூர்
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரமேரூர் அருகே குடிநீர் கிணற்றிற்குள் விழுந்த இருவர் பலி
Reviewed by Uhiramerur News.Com Admin
on
September 29, 2015
Rating: 5
No comments