சிறுமி 8 மாத கர்ப்பம் பெற்றோர் அதிர்ச்சி: ஆட்டோ டிரைவரிடம் விசாரணை
உத்திரமேரூர் செப். 29:வயிறு வலி சிகிச்சைக்காக சென்ற சிறுமி 8 மாத கர்ப்பமாக இருந்ததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இது ெதாடர்பாக ஆட்டோ டிரைவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். உத்திரமேரூர் அடுத்த கிராமத்தை சேர்ந்தவர் வாசகம் மகள் சுமதி (16) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது). பிளஸ் 1 படித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த முதியவர் கருமணன் என்பவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பெருநகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சீனு (21) என்பவர் வருவார். அடிக்கடி வந்து சென்ற வகையில், சுமதியுடன் சீனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 25ம் தேதி சுமதி திடீரென வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனே அவரை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். டாக்டர் பரிசோதனையில், சுமதி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இதை பெற்றோரிடம் டாக்டர் கூறியதும் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி சுமதியிடம் விசாரித்தபோது சீனுவுடன் நெருங்கி பழகியதும், இதுபற்றி உன் பெற்றோரிடம் கூறினால் கொலை செய்து விடுவதாக அவர் மிரட்டியதும் தெரிந்தது. மேலும் சீனுவுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்துள்ளது. இதுகுறித்து பெருநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார், சீனுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments