பெருநகரில் சிறப்பு மருத்துவ முகாம்
உத்திரமேரூர்
தாலுக்கா பெருநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமையன்று சிறப்பு மருத்துவமுகாம்
மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம் நடைபெற்றது. பெருநகர்
ஊராட்சி மன்றத்தலைவர் ஆர்.விஜயக்குமார் தலைமை தாங்கினார். சேர்மென் ஆர்.கமலக்கண்ணன்,
துணணைச்சேர்மென் அ.ரவிசங்கர் முன்னிலை வகித்தனர். மானாம்பதி சுகாதார நிலையம் வட்டார
மருத்துவ அலுவலர் ஆர்.உமாதேவி வரவேற்றார். உத்தரமேரூர் சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் கலந்து
கொண்டு சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்து பேசினார். கற்பக விநாயகா மருத்துவமனை,
செங்கல்பட்டு ஜே.எஸ்.பி,மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவர்கள்
ஆகியோர் இருதயநோய், சிறுநீரகநோய், எலும்பு, காது, மூக்கு, தொண்டை பெண்கள் சிறப்பு பிரிவு,
கண் மருத்துவம் உட்பட பல்வேறு சிகிச்சை அளித்து மருந்து மாத்திரைகள் வழங்கினார்கள்.
இம்முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் உரிய அறுவைசிகிச்சைக்கு உரிய மருத்துவமனைக்கு
பரிந்துரைக்கப்பட்டனர். ஒன்றிய செயலாளர் வி.அர்.அண்ணாமலை, களியாம்பூண்டி தங்க.பஞ்சாட்சரம்,
வாலாஜாபாத் சேர்மென் என்.எம்.வரதராஜிலு உட்பட பலர் பங்கேற்றனர். பெருநகர் ஒன்றியக்குழு
உறுப்பினர் என்.கருணாகரன் நன்றி கூறினார்.

No comments