உத்தரமேரூர் மேற்கு ஒன்றியம் காவனுார்புதுச்சேரி
கிராமத்தில் 380 பயனாளிகளுக்கும், அழிசூர் கிராமத்தில் 375 பயனாளிகளுக்கும் விலையில்லா
மின்விசிறி, மிக்சி, கிரைண்டர்களை உத்தரமேரூர்
தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கி தமிழக முதல்வர் ஜெயலலிதா
வழங்கி வரும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை எடுத்து கூறி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில்
அ.தி.மு.க விற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.
காவனுார் புதுச்சேரியில் நடைபெற்ற விழாவிற்கு ஒன்றியக்குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன்,
துணைத்தலைவர் அ.ரவிசங்கர். முன்னிலைவகித்தனர். தொகுதி செயலாளர் காந்தாதருமன் தலைமை
தாங்கினார். காவனுார்புதுச்சேரி ஒன்றியக்குழு உறுப்பினர் தேன்மொழிபெருமாள் அனைவரையும்
வரவேற்றார். மேலும் அழிசூர் கிராமத்தில் நடைபெற்ற விழாவிற்கு ஊராட்சி மன்றத்தலைவர்
டில்லி என்கிற இ.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். களியாம்பூண்டி ஒன்றியக்குழு உறுப்பினர்
தங்க.பஞ்சாட்சரம், வரவேற்றார். சேர்மென் ஆர்.கமலக்கண்ணன், துணைச்சேர்மென் அ.ரவிசங்கர்,
முன்னிலை வகித்தனர். கிழக்கு ஒன்றியகழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு, கே.ஆர்.தருமன், ஓ.வி.வரதன். சுப்புரெட்டி, கே.கே.பெருமாள்,
தணட்ரை தணிகைவேல், பி,வில்வபதி, காவாம்பியிர் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.குணசேகரன்,
கே.லட்சுமணன், என்.பி.தினகரன், உட்பட பலர்பங்கேற்றனர்.
உத்தரமேரூர் ஒன்றியத்தில் 755 மின்விசிறி மிக்சி, கிரைண்டர் வழங்கும் விழா
Reviewed by UTR GUYS
on
December 26, 2013
Rating: 5
No comments