உத்தரமேரூர்
கிழக்கு ஒன்றியத்தில் சனிக்கிழமையன்று 1223 பயனாளிகளுக்கு விலையில்லா
பொருட்கள் வழங்கும் விழா நடந்தது. கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்
கே.பிரகாஷ்பாபு ஒன்றியக்குழுதுணைத்தலைவர் அ.ரவிசங்கர். முன்னிலை வகித்தனர்.
காவியத்தண்டலம் கிராமத்தில் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.முருகவேல் தலைமை
தாங்கினார். ஊராட்சி செயலாளர் ஏ.ஜெயபால், மேலவைபிரதிநிதி பால்ராஜ்
வரவேற்றனர். கலியப்பேட்டையில் ஊராட்சி மன்றத்தலைவர் காத்தவராயன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கோவிந்தராஜ்
வரவேற்றார். எடமிச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கௌசல்யாமுருகன், தலைமை
தாங்கினார். துணைத்தலைவர் லலிதாரகு வரவேற்றார். காவியத்தண்டலத்தில் 438
களியப்பேட்டையில் 424, எடமிச்சியில் 361 ஆக மொத்தம் 1223 பயனாளிகளுக்கு
விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர்களை உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற
உறுப்பினரும் காஞ்சி மேற்கு மாவட்ட கழக செயலாளருமான வாலாஜாபாத் பா.கணேசன்
வழங்கி தமிழக முதல்வரின் சாதனைகளை பற்றி பாராட்டி பேசினார். இவ்விழாவில்
தொகுதி செயலாளர் கே.ஆர்.தர்மன் ஓ.வி.வரதன், குண்ணவாக்கம்
ஆர்.கிருஷ்ணமூர்த்தி, திருவந்தவார்முருகன், தண்டரை தணிகைவேல், சுமதி
குணசீலன், தர்மராஜ், பாஸ்கர், எம்.ஆர்.செந்தாமரை, வாடாதவூர்
ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஐ.சதீஷ், ஒன்றிய பொருளாளர் வி.அண்ணாதுரை, விச்சூர்
அம்பிகா கோவிந்தராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
1223 மின்விசிறி, மிக்சி, கிரைண்டர்கள் எம்.எல்.ஏ.வழங்கினார்.
Reviewed by UTR GUYS
on
December 30, 2013
Rating: 5
No comments