உத்தரமேரூர் தாலுக்கா களியாம்பூண்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
உத்தரமேரூர்
தாலுக்கா களியாம்பூண்டி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று தமிழக முதல்வர்
ஜெயலலிதா 65-வது பிறந்த நாள் விழா கழக கொடியேற்றி கல்வெட்டு திறந்து வைத்து
நலத்திட்ட உதவிகள் வழங்கி ஈராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
காஞ்சி மேற்கு மாவட்ட கழக செயலாளரும் உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற
உறுப்பினருமான வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய
எம்.ஜீ.ஆர்.மன்ற செயலாளர் தங்க பஞ்சாட்சரம் முன்னிலை வகித்தார். கிழக்கு,
மேற்கு ஒன்றிய கழக செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை
கே.பிரகாஷ்பாபு, ஒன்றியகுழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர்
அ.ரவிசங்கர் வரவேற்றனர். தலைமை கழக பேச்சாளர் விழுப்புரம் செல்வராஜ் காஞ்சி
எம்.எல்.ஏ.வி.சேலம் சுந்தரம் சிறப்புரையாற்றினார்கள் இவ்விழாவில் 650
ஹாட்பாக்ஸ், சைக்கிள்10, தையல் மிஷின்10, அயன்பாக்ஸ்10, இலவச வேட்டி
சேலைகளை, கால்நடைத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னைய்யா வழங்கி பாராட்டி
பேசினார். திணையாம்பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் எம்.கே.தனபால், புலியூர்
ஆர்.பழனி, பெருநகர் விஜயக்குமார், மற்றும் மானாம்பதி கண்டிகை லுாசியாஜேம்ஸ்
தண்டரை தணிகைவேல், ஏ.ராஜாமணி உட்பட பலர் பங்கேற்றனர். களியாம்பூண்டி
ஊராட்சி மன்ற தலைவர் பி.வேலு நன்றி கூறினார்.

No comments