உத்தரமேரூர் தாலுக்கா கருவேப்பம்பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள நீரோடை மேனீரில் மங்கையின் மகிமைகீர்த்திமதி
அன்னை சக்தி பீடத்தில் திங்கட்கிழமையன்று காலை அன்னையின் 55-ம் ஆண்டு
அவதார தின விழா நடந்தது. காலை 4 மணிக்கு அன்னைக்கு அபிஷேக அலங்காரமும், 5
மணிக்கு சக்தியின் கலச வேள்வி பூஜையும், 6.30 மணிக்கு கலச அபிஷேகமும்,
நடந்தது. காலை 11 மணிக்கு ஓம் சக்தி பீடம் மங்கையின் மகிமை ட்ரஸ்ட்
சார்பில் கருவேப்பம்பூண்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும்
171 மாணவ, மாணவியருக்கு சீருடை மற்றும் நோட்டுப்புத்தகங்களும், பேனா,
பென்சில்கள்,கீர்த்திமதி அன்னை வழங்கினார். பள்ளி தலைமை
ஆசிரியர் (பொறுப்பு ஆர்.ராமகிருஷ்ணன் வரவேற்றார். அறிவியல் ஆசிரியை சர்மிளா
நன்றி கூறினார். ஓம் சக்தி பீடத்தில் நடைப்பெற்ற விழாவில் ஏழை எளிய மக்களுக்கு வேட்டி, சேலைகளை, அன்னை வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் நிர்வாகி ஆர்.மாதவன் செய்திருந்தனர். இவ்விழாவில் பாண்டிச்சேரி சக்தி பீட மன்றத்தினர் உட்பட பலர் பங்கேற்றனர்.
கருவேப்பம்பூண்டி கீர்த்திமதி அன்னை 55-ம் ஆண்டு அவதார தினவிழா 171 பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும்விழா
Reviewed by Uhiramerur News.Com Admin
on
July 10, 2013
Rating: 5
No comments