உத்தரமேரூர் ஜீன், 06உத்தரமேரூர் கே.எம்.ஆர்.பேரூந்து நிலையத்தில் புதன்கிழமையன்று காஞ்சி
மாவட்ட தி.மு.க.விவசாய அணி சார்பில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் 90வது
பிறந்த நாள் விழாவையொட்டி சிறப்பு பட்டி மன்றம் நடைபெற்றது. மாவட்ட விவசாய
அணி அமைப்பாளர் சோழனுார் மா.ஏழுமலை தலைமை தாங்கினார். உத்தரமேரூர் தி.மு.க
ஒன்றிய கழக செயலாளர் இரா.நாகன் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்
ப.குமரவேல், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கே.ஞானசேகரன் பேரூர் செயலர்
என்.எஸ்.பாரிவள்ளல். பேரூராட்சி மன்ற தலைவர் சுமதிகுணசேகரன் ஆகியோர்
முன்னிலை வகித்தனர். ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பொ.தவனகிரி வரவேற்றார்.
கலைஞர் கருணாநிதியின் நிலைத்த புகழுக்கு காரணம் தந்தை பெரியாரின் துணிவே
என்ற தலைப்பிலும் அறிஞர் அண்ணாவின் கனிவே என்ற தலைப்பிலும் நடைபெற்ற
சிறப்பு பட்டி மன்றத்திற்க்கு திண்டுக்கல் ஐ.லியோனி தலைமை தாங்கினார்.
இவ்விழாவில் நலத்திட்ட உதவியில் காஞ்சி மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன்
காஞ்சி மாவட்ட கழக அவைத்தலைவர் க.சுந்தர், ஆகியோர் தென்னங்கன்றுகளை வழங்கினார்கள். பேரூராட்சி மன்ற உறுப்பினர். தா.சுப்பராயன் நன்றி கூறினார். இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை காஞ்சி மாவட்ட தி.மு.க விவசாய அணி நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
உத்தரமேரூரில் கருணாநிதி 90வது பிறந்த நாள் விழா சிறப்பு பட்டி மன்றம் திண்டுக்கல் ஐ. லியோனி பங்கேற்பு
Reviewed by Uhiramerur News.Com Admin
on
June 07, 2013
Rating: 5
No comments