உத்திரமேரூர் அருகே சோகம் நீரில் மூழ்கி மாணவன் சடலமாக மீட்பு பேரிடர் மீட்பு குழு அதிரடி
உத்திரமேரூர் 10/11/2021
உத்திரமேரூர் அருகே சோகம் நீரில் மூழ்கி மாணவன் சடலமாக மீட்பு பேரிடர் மீட்பு குழு அதிரடி
உத்திரமேரூர் அடுத்த கட்டியாம்பந்தல் கிராமத்தை சேர்ந்த எல்லமாள்
மூதாட்டி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவால்
உயிரிழந்தார். மூதாட்டியின் மகள் சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த
வனிதா தனது 10 ஆம் வகுப்பு படிக்கும் மகன் சந்தோஷ் மற்றும் மகளுடன்
நேற்று நடந்த இறுதி சடங்கு நிகழ்விற்கு கட்டியாம்பந்தல் கிராமத்திற்கு
வந்திருந்தார். இந்நிலையில் கட்டியாம்பந்தல் அருகே வெள்ளப்புத்தூர் கிராமம்
செல்லும் சாலையில் ஓடை ஒன்றில் தரைப்பாலத்திற்கு மேல் வெல்லப்
பெருக்கு ஏற்பட்டு மழைநீர் ஆற்பறித்து சென்று கொண்டிருந்த்து..
இந்நிலையில் சந்தோஷ் தனது நண்பர்களுடன் ஓடைப் பகுதிக்கு குளிக்கச் நேற்று
சென்றுள்ளார். அப்போது ஓடையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதில்
நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த சந்தோஷ் திடீரென அடித்து மழை
நீரில் செல்லப்பட்டான். அருகில் இருந்த நண்பர்களுக்கு மீட்க முடியாமல்
திரும்பினர். இதையடுத்து உத்திரமேரூர் தீயணைப்புத்துறையினருக்கு சம்பவ
இடத்திற்கு விரைந்து வந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். நேற்று மாலை வரை தேடியும் மாணவனை மீட்க முடியவில்லை நேற்று இரவு நேரமாகிவிட்டதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது இதனால் நேற்று இரவு மீட்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டது இதனையடத்து இன்று காலை சுமார் 7
மணியளவில் பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மாணவனை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர் இந்நிலையில் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு பகல் 11 மணி அளவில் மாணவனின் உடல் சேற்றில் சிக்கிய நிலையில் சடலமாக மீட்டனர் இதனால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

No comments