உத்திரமேரூர் அருகே மகன் பிறந்தநாளை கொரோனா நிவாரணம் வழங்கி கொண்டாடிய விவசாயி
உத்திரமேரூர் 28/05/2020 உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சக்திவேல் இவரது மகன் யஷ்வந்த் இவரின் 6 வது பிறந்த நாளையொட்டி தாங்கள் பயிரிட்டிருந்த அரிசி காய்கறிகளை நெல்லிமேடு கிராமத்தில் வசிக்கும் 450 ஏழை எளிய குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக வழங்கி பிறந்தநாளை கொண்டாடினர். நிகழ்ச்சியில் உத்திரமேரூர் சட்ட மன்ற உறுப்பினர் க.சுந்தர் கலந்து கொண்டு குழந்தையினை வாழ்த்தி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். உடன் ஒன்றிய செயலாளர் குமார் மற்றும் பலர் உடனிருந்தனர். முன்னதாக சாலவாக்கம் பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பிறந்த நாள் கொண்டாடிய யஷ்வந்தை வாழ்த்தி சென்றனர். இதேபோல் கடந்த மாதம் இவரின் மகள் கமலியின் பிறந்தநாளில் ஆனம்பாக்கம் கிராமத்தில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கி கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
No comments