உத்திரமேரூர் அருகே 5 சவரன் செயின் பறிப்பு
உத்திரமேரூர் 24/02/2020உத்திரமேரூரை சேர்ந்த பங்கஜவள்ளி 57. உத்திரமேரூர் அடுத்த மருத்துவான்பாடி கிராமத்தில் அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி
வருகிறார். பங்கஜவள்ளி நேற்று (24/02/2020 ) அங்கன்வாடி பணிகள் முடிந்ததும் மருத்துவான்பாடி கூட்ரோடிற்கு சென்ற அங்கு பஸ்காக காத்திருந்தார். இந்நிலையில் இவரின் பின்னால் வந்த மர்ம நபர்கள் வாயில் துணி கட்டியபடி இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். பங்கஜவள்ளி அருகே வந்த இருவரும் திடீரென பங்கஜவள்ளியினை கீழே தள்ளிவிட்டு அவர் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க செயினை பறித்து சென்றனர். கிழே விழுந்த
பங்கஜவள்ளி தட்டுத்தடுமாறி எழுந்தார். அதற்குள்ளாக இருச்சக்கரவாகனம்
காணாமல் போனது பதறிப் போன பங்கஜவள்ளி இது குறித்து உத்திரமேரூர்
போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments