உத்தரமேரூர் தாலுக்கா அலுவலகம் எதிரே ஜாக்டோ ஜியோ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க கிளை தலைவர் விமல விநாயகம் தலைமை தாங்கினார் ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் மதிப்பூதியம் ஆதார முறை நியமனங்களை கைவிட்டு அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்
உத்தரமேரூர் தாலுக்கா அலுவலகம் எதிரே ஜாக்டோ ஜியோ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Reviewed by Uhiramerur News.Com Admin
on
January 23, 2019
Rating: 5
No comments