உத்திரமேரூரில் சாலை விபத்து கணவர் எதிரே மனைவி பலி
உத்திரமேரூர்-13-02-2017காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே மருத்துவான்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் கூலி தொழிலாளி. இவரது மனைவி சித்ரா (30). இருவரும் நேற்று செங்கல்பட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு பைக்கில் சென்றுவிட்டு அங்கிருந்து மாலையில் வீட்டுக்கு திரும்பினர். செங்கல்பட்டு-உத்திரமேரூர் சாலை மல்லியங்கரணை கூட்டு சாலையில் உள்ள வளைவில் திரும்பும்போது பைக்கில் இருந்து கீழே விழுந்தார் சித்ரா. அந்த நேரத்தில் அவ்வழியாக வந்த வேன், சித்ரா மீது ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கிய சம்பவ இடத்திலேயே சித்ரா பரிதாபமாக இறந்தார். ரத்தவெள்ளத்தில் மனைவி இறந்துகிடப்பதை பார்த்து கணவர் கதறி துடித்தார். இதுபற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் திரண்டனர். விபத்து நடந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும். விபத்தை ஏற்படுத்திய டிரைவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் 'என்று மக்கள் கோஷமிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். '' உங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கிறோம் 'என்று போலீசார் கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்
No comments