உத்திரமேரூர் ஆக 04காஞ்சிபுரம்
மேற்கு மாவட்டம் உத்திரமேரூர் கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில்
சாலவாக்கத்தில் அ.தி.மு.க அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம்
நேற்று நடந்தது. கூட்டத்தில் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு தலைமை தாங்கினார். காஞ்சி மேற்கு மாவட்ட கழக செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் முன்னிலை வகித்தார். ஒன்றிய
குழுத் தலைவர் ஆலஞ்சேரி இரா.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர்,
மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வி.ஆர்.அண்ணாமலை அனைவரையும் வரவேற்றனர். கழக
அமைப்பு செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு, தலைமை கழக பேச்சாளர்கள்
பெரம்பூர் சாலமன், கழக அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து விளக்கி
பேசினார்கள். இக்கூட்டத்தில்
ஊராட்சி மன்ற தலைவர் தனகோடிகன்னியப்பன், திருவந்தவார் முருகன், ஒழையூர்
ஆர்.நாராயணசாமி, தண்டரைதணிகைவேல், வி.எஸ்.இ.போத்தன், வனிதாமுருகன்,
குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.என்.குணசேகரன், சுமதிகுணசீலன்,
வி.அண்ணாதுரை, உட்பட பலர் கலந்து கொண்டனர். கிளை கழக செயலாளர் எஸ்.எம்.சினுவாசன், அம்மா பேரவை கிளை செயலாளர் கே.மூவேந்தன் நன்றி கூறினார்கள்.
சாலவாக்கத்தில் அ.தி.மு.க அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம்
Reviewed by Uhiramerur News.Com Admin
on
August 05, 2016
Rating: 5
No comments