குப்பையில் கொட்டிக்கிடந்த உத்திரமேரூர் தொகுதி வாக்காளர் அடையாள அட்டைகள்
காஞ்சிபுரம் மே.14; காஞ்சிபுரம் அருகே குவியல் குவியலாக வாக்காளர் அட்டைகள் கொட்டிக்கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நாளை மறுதினம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டிவருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை என்ற பகுதியில் இன்று காலை சாலை ஓரத்தில் குவியல் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள் கொட்டிக்கிடந்ததை பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்
இதுகுறித்து உடனடியாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து
உதவி கலெக்டர் தலைமையில் வந்த அதிகாரிகள் கொட்டிக்கிடந்த வாக்காளர் அடையாள
அட்டைகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அது உத்திரமேரூர்
தொகுதிக்குட்பட்டவர்களின் வாக்காளர் அட்டைகள் என தெரியவந்துள்ளது.
தேர்தலுக்கு இன்னும் ஒருநாளே உள்ள நிலையில் ஆயிரக்கணக்கில் வாக்காளர்
அடையாள அட்டைகள் குப்பையில் கொட்டிக்கிடந்தது தேர்தல் அதிகாரிகளை
அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த வாக்காளர் அட்டைகளை மூட்டையில் கட்டி வீசி
சென்றதற்கான அடையாளமான மூட்டை ஒன்றும் அங்குகிடந்தது. வாக்காளர் அடையாள
அடடைகளை வீசி சென்றது யார் எதற்காக வீசினார்கள் என தேர்தல் அதிகாரிகள்
விசாரணை செய்துவருகின்றனர்.

No comments