உத்திரமேரூர்நவ,
26காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அரசு
மருத்துவமனையில் மழை கால சிறப்பு மருத்துவ முகாம் கடந்த 20 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.
இந்த முகாமில் மழை காலத்தில் ஏற்படும் நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கும் வகையில்
சிறப்பு மருத்துவ முகாம் போடப்பட்டுள்ளது. இந்த முகாமில் அனைத்து வகை காய்ச்சல்களும்
வராமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள்
அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் காலை முதல் மாலை வரை தொடர்ந்து வழங்கப்பட்டுவருகிறது.
மேலும் இந்த மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமிற்கு தனி மருத்துவர்கள் நியமனம் செய்து
சிகிச்சை அளிக்கின்றனர். இந்த சிறப்பு மருத்துவ முகாமிற்கு உத்தரமேரூர் மற்றும் சுற்றியுள்ள
பகுதிகளிலிருந்து தினமும் சுமார் 700க்கும் மேற்பட்ட பொது மக்கள் வந்து சிகிச்சைப்பெற்று
வருகின்றனர். இது குறித்து மருத்துவர் செந்தில்குமார் கூறுகையில் தமிழக அரசின் மக்கள்
நல்வாழ்வு துறை சார்பில் நடைப்பெற்றுக் கொண்டு இருக்கும் இந்த சிறப்பு மருத்துவ முகாமில்
நாள்தோரும் ஏராளமானோர் பயனடைந்து வருவதாக கூறினார்.
மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்
Reviewed by Uhiramerur News.Com Admin
on
November 27, 2015
Rating: 5
No comments