விலையில்லா பொருள்கள்: அமைச்சர் வழங்கினார்
உத்தரமேரூர் ஜீன் 02 2015உத்தரமேரூர் ஒன்றியம் மதூர் கிராமத்தில் தமிழக அரசின் விலையில்லா பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு உத்தரமேரூர் எம்எல்ஏ வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை வகித்தார். ஒன்றியக் குழுத் தலைவர் ஆர்.கமலக்கண்ணன், ஒன்றியக் குழு துணைத் தலைவர் அ.ரவிசங்கர், ஒன்றியச் செயலாளர்கள் கே.பிரகாஷ்பாபு, வி.ஆர்.அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாட்சியர் ஹரிதாஸ் வரவேற்றார். கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, மாவட்ட ஆட்சியர் வி.கே.சண்முகம் ஆகியோர் பங்கேற்று விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்கிப் பேசினார்.மதூரில் 304, அருங்குன்றத்தில் 201, பட்டா 140, சிறுதாமூரில் 100, ராவத்தநல்லூர் கண்டிகைக்கு 866 என மொத்தம் 1,611 பேருக்கு விலையில்லா பொருள்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர்கள், பூந்தண்டலம் ராஜேந்திரன், லூசியாஜேம்ஸ், பெ.சசிகுமார், ஜெயவிஷ்ணு உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்.
விலையில்லா பொருள்கள்: அமைச்சர் வழங்கினார்
Reviewed by Uhiramerur News.Com Admin
on
June 03, 2015
Rating: 5
Reviewed by Uhiramerur News.Com Admin
on
June 03, 2015
Rating: 5
No comments