காஞ்சிபுரம்,
உத்திரமேரூர், செங்கல்பட்டு போன்ற பல்வேறு பகுதிகளில் அதிமுக பொது செயலாளரும்,
தமிழக முதல்வருமான ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு எதிர்த்து அதிமுகவினர் கண்டன
ஆர்ப்பாட்டம் நடத்தினர். காஞ்சிபுரம் புதியரெயில்வேசாலையில் காஞ்சிபுரத்திலிருந்து பூந்தமல்லிசென்று கொண்டிருந்தஅரசுபஸ்சைதிடீரெனவழிமறித்தனர். பயணிகளைஇறக்கிவிட்டுபஸ்சுக்குதீவைத்தனர். உடனேபயணிகள்அலறியடித்துஓட்டம்பிடித்தனர். இதனால்அந்தபகுதியில்பரபரப்புஏற்பட்டது. தகவல்அறிந்ததும்காஞ்சிபுரம்தீயணைப்புவீரர்கள் சம்பவ
இடத்திற்கு விரைந்துவந்துதீயைஅணைத்தனர். உத்திரமேரூர் பஜார் வீதிகளில் கருணாநிதி உருவ பொம்மை
எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பஜார் வீதியில் உள்ள அனைத்து கடைகளும்
அடைக்கப்பட்டன. இதனால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. செங்கல்பட்டு
புதிய பேரூந்து நிலையத்தில் கருணாநிதி மற்றும் சுப்பிரமணியசுவாமி உருவ பொம்மை
எரித்தனர். அனைத்து பகுதிகளில் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பயணிகள்,
பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். இதனால் பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை
நிலவிவருகிறது.
காஞ்சிபுரத்தில் ஜெயலலிதாவிற்கு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து பஸ் எரிப்பு அதிமுக வினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்
Reviewed by Uhiramerur News.Com Admin
on
September 28, 2014
Rating: 5
No comments