கடல்மங்கலத்தில் இலவச பசுமாடுகள் அமைச்சர் டி.கே.எம்.சின்னைய்யா வழங்கினார்
உத்தரமேரூர் ஆக,0950 இலவச கறவை மாடுகள்
உத்தரமேரூர் அடுத்த கடல்மங்கலம் கிராமத்தில் நேற்று 16 லட்சத்து
83ஆயிரத்து 750 ரூபாய் மதிப்பில் 50 பயனாளிகளுக்கு கறவை பசுக்கள்
வழங்கும் விழா நடைப்பெற்றது. விழாவில் கடல்மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் தே.வீராசாமி அனைவரையும் வரவேற்றார். உத்தரமேரூர் எம்.எல்.ஏ வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கே.பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.
அமைச்சர் டி.கே.எம்.சின்னைய்யா
கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் டி.கே.எம்.சின்னைய்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 50 பயனாளிகளுக்கு கறவை பசுக்களை வழங்கினார்.
இவ்விழாவில் காஞ்சிபுரம் எம்.எல்.ஏ.வி.சோமசுந்தரம், உத்தரமேரூர் வட்டாட்சியர் ரவி, ஒன்றிய செயலாளர் கே.பிரகாஷ்பாபு, உத்தரமேரூர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் அ.ரவிசங்கர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கார்வண்ணன், டி.எம்.சடையாண்டி, கால்நடைதுறை மண்டல இணை இயக்குனர் சுகுமாரன், உதவி இயக்குனர் ராஜன்ஆன்டனி, கால்நடை மருத்துவர்கள் முருகேசன், மாலதி, திருவந்தவார்முருகன், வாடாதவூர்
ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஐ.சதீஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் உத்தரமேரூர் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.கமலக்கண்ணன் நன்றி கூறினார்
No comments