உத்தரமேரூர் அடுத்த
அழிசூரில் கிராமதிதில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் ஸ்ரீ எல்லையம்மன் கோவில்.
இக்கோவிலானது கடந்த சிலவருடங்களாக சிதலமடைந்து இருந்தது. ஊர்பொதுமக்கள் ஒன்று கூடி
கோவிலை புனரமைக்க வேண்டும் என முடிவெடுத்தனர். அதன் அடிப்படையில் கோவில் புனரமைக்கப்பட்டு
இன்று காலை மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை யெட்டி நேற்று விக்னேஸ்வரபூஜை,
கணபதிஹோமம், கோபுகதனபூஜை, பூர்ணாஹீதி வாஸ்துசாந்தி பிரவேசபலி, கலஸ்தாபனம், யாகசாலைபூஜை,
ஹோமம் நடந்தது. பக்தர்களுக்கு சர்க்கரைபொங்கல், எலுமிச்சம்சாதம். சாம்பார்சாதம், மோர்
வழங்கினார்கள். இவ்விழாவில் அழிசூர் ஊராட்சி மன்றத்தலைவர் டி.டில்லி(எ)ராதாகிருஷ்ணன்,
துணைத்தலைவர் கே.செல்லன், ஒன்றியக்குழுஉறுப்பினர்
வி.கன்னியப்பன், பால் உற்பத்தியாளர் சங்க தலைவர்
ஆதிமூலம், வார்டு உறுப்பினர்கள் கே.யுக்கிரவேல் கோவிந்தசாமி, ஏ.இ.முருகன்,
சே.சித்ரா, இ.சம்பத் மற்றும் ஊராட்சி செயலர் நாகப்பன்
உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இரவு
அலங்கரிக்கப்பட்டரதத்தில் அம்மன் திருவீதி உலா பக்தர்களுக்கு
காட்சியளித்தார்.
ஸ்ரீ எல்லயைம்மன் ஆலய கும்பாபிஷேகம்
Reviewed by Uhiramerur News.Com Admin
on
June 02, 2014
Rating: 5
No comments