உத்தரமேரூர்
நெல்வாய்கூட்ரோடு சாலைகள் வழியாக மணல் லாரிகள் செல்ல தடை விதிக்க வேண்டும்
என்று இந்திய மாணவர்கள் சங்கத்தினர் சனிக்கிழமையன்று கோரிக்கை
விடுத்துள்ளனர். கடந்த2 நாட்களாக உத்தரமேரூர், காஞ்சிபுரம்
சாலையில் மிக வேகமாக நுாற்றுக்கணக்கான மணல் லாரிகள் நகருக்குள் வருகின்றன.
இச்சாலைகளில் உத்தரமேரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள்
மேல்நிலைப்பள்ளி அரசுகலை அறிவியல் கல்லுாரி, மீனாட்சி அம்மாள்
பாலிடெக்னிக், ஆசிரியர் பயிற்சி, மீனாட்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
கல்வியியல் கல்லுாரி, குளோபல் பள்ளிகள் உட்பட மாணவ, மாணவியர்,
கைக்கிள்களிலும், நடந்தும் செல்லும் போது விபத்து ஏற்படும் நிலை உள்ளதை
மாற்றி மணல் லாரிகள் உள்ளே வருவதை தடைசெய்ய வேண்டும் என்று உத்தரமேரூர்
காவல் துறையினரிடம் இந்திய மாணவர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்
உத்தரமேரூரில் மணல் லாரிகள் வர தடை இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை
Reviewed by UTR GUYS
on
October 28, 2013
Rating: 5
No comments